பட்டியல் பிரிவு வெளியேற்றம் நிறைவேற்றப் படவில்லையெனில் பாஜக கூட்டணிக்கு தேவந்திரகுல வேளாளர் வாக்குகள் கிடைக்காது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
மதுரையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி “தேவந்திரகுல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளின் ஒரு பகுதியான பெயர்மாற்ற திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது, 6 உட்பிரிவுகளை சேர்ந்த வகுப்பினரை தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் அழைப்பதோடு, பட்டியல் பிரிவிலிருந்து இருந்து வெளியேற்ற வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை, பட்டியல் பிரிவில் இடம்பெற்றதால் சமூக ஒடுக்கல்களுக்கு ஆளாகினர்.
புதிய தமிழகம் கோரிக்கை என்பது பெயர் மாற்றம் மட்டுமல்ல. பட்டியல் பிரிவில் வெளியேற்ற வேண்டும் என்பதும் தான், ஆனால் மத்திய அரசு பெயர் மாற்றத்தை மட்டும் நிறைவேற்றியுள்ளது, பெயர்மாற்ற மசோதாவில் சிறு மாற்றம் கொண்டுவந்து பட்டியல் பிரிவில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதே மத்திய அரசு நாங்கள் விடுக்கும் வேண்டுகோள் எனவும் தமிழக அரசு வெறும் பெயர் மாற்றத்திற்கு மட்டுமே பரிந்துரை செய்துள்ளது, பெயர் மாற்றம் என்பதை மட்டும் நாங்கள் முழுமையாக ஏற்றுகொள்ளும் மனநிலை இல்லை எனவும் மத்திய அரசின் நடவடிக்கை இடிந்த சுவருக்கு வர்ணம் பூசுவது போன்ற நடவடிக்கை” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் “ எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதில் மத்திய அரசு நிறைவேற்றாததற்கு எதுவும் பிண்ணனி உள்ளதா? மத்திய அரசின் பெயர் மாற்ற அறிவிப்பு கேலிக்கூத்தானது , பட்டியல் பிரிவு வெளியேற்றம் என்பது எங்களது அடிப்படை வாழ்வாதார பிரச்சனை. பட்டியல் பிரிவில் இருந்து எங்களை நீக்கவில்லை எனில் சமத்துவத்தை விரும்பாதவர்கள் என்று தான் அர்த்தம். பட்டியல் பிரிவு வெளியேற்றம் அறிவிப்பு வரும்வரை எங்களது போராட்டம் தொடரும், பட்டியல் பிரிவில் இருப்பதால் அரசு பணி உள்ளிட்ட இட ஒதுக்கிட்டிற்காக வெளியேறவில்லை. சுயமரியாதைக்காக தான் வெளியேறுகிறோம், எந்த அரசியல் கட்சி மீதும் தனிப்பட்ட அனுசரனையாக நான் இருக்கமாட்டேன். ஒத்த கருத்து இருக்ககூடிய கட்சியோடு கூட்டணியில் இருந்திருக்கிறோம்.
எங்களது கோரிக்கைகளை ஏற்றுகொண்டதால் நாங்கள் பாஜகவுடன் இணைந்தோம், பட்டியல் பிரிவு வெளியேற்றம் நிறைவேற்றவில்லை எனில் தேர்தலில் பிரதிபலிக்கும், திராவிட கட்சிகள் சமத்துவத்தை விரும்பவில்லை என்பதால்தான் எங்களின் கோரிக்கை புறக்கணிக்கப்படுகிறது. சமுதாய மாற்றம், சமூக உயர்வு குறித்து கண்டுகொள்ளவில்லை எல்லாம் வாக்குகளாக தான் திராவிட கட்சிகள் பார்க்கின்றது, வரும் 25ஆம் தேதி கோவை வரும் பிரதமரை சந்தித்து எங்களது பட்டியல் பிரிவு வெளியேற்றம் குறித்து கோரிக்கை விடுப்பேன்.
பட்டியல் பிரிவு வெளியேற்றம் என்ற பிரதான கோரிக்கை நிறைவேற்றபடவில்லை எனில் பாஜக கூட்டணிக்கு தேவேந்திர குல வேளாளர்களின் வாக்குகள் கிடைக்காது, மத்திய அரசின் பெயர் மாற்றம் அறிவிப்பு என்பதே தினசரிகளில் பாராட்டு விளம்பரத்திற்கு மட்டுமே பயன்படும், என்றும் குடியுரிமை சட்டத்தை எளிதாக நிறைவேற்றிய மத்திய அரசு எங்களது பட்டியல் பிரிவு வெளியேற்றத்தை செயல்படுத்த மறுப்பது ஏன்?” என்றார்
Loading More post
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
பெட்ரோல் டீசலுக்கு லோன் தாங்க.. வங்கியில் மனு கொடுத்த இளைஞர்கள்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'