கோவை கிராஸ்கட் சாலையில் நிறுத்தபட்டிருந்த இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை நகரின் மையப்பகுதியாகவும் வணிக ரீதியிலான கடைகள் நிறைந்த பகுதியாகவும் உள்ளது கிராஸ்கட் சாலை, அந்த பகுதியில் உள்ள சாலையில் வங்கி ஊழியர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றார். அப்போது சிறிய பாம்பு ஒன்று வாகனத்தினுள் புகுந்துள்ளது. இதைப் பார்த்த பெண் ஒருவர் பாம்பு பாம்பு என்று கூக்குரல் எழுப்பினார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அந்த பாம்பை அடிக்க முற்பட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த விலங்கின ஆர்வலர்கள் அவர்களை தடுத்து பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடிப்பவர், வாகனத்தில் புகுந்த கொம்பேறி மூக்கன் ரக பாம்பை லாவகமாக பிடித்து வனத்தை ஒட்டிய பகுதியில் விட்டுவிட்டார்.
நகர மையப்பகுதியில் சாலையில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?