உசிலம்பட்டி சிசு உயிரிழப்பில், குழந்தை செயற்கையாக ஏற்பட்ட மூச்சுதிணறலால் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கே.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி - சிவப்பிரியங்கா தம்பதி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 8 மற்றும் 3 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 10 ஆம் தேதி மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு உசிலம்பட்டி அருகே உள்ள தங்களது வீட்டிற்கு வந்த இந்த தம்பதி, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக கூறி உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் முகத்தில் காயங்கள் இருந்ததாக கூறி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் பிரேதபரிசோதனை முதற்கட்ட ஆய்வில், குழந்தை செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட மூச்சுதிணறலால் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்து மாவட்ட எஸ்.பி சுஜித்குமார் பெற்றோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யவிருப்பதாகவும், உரிய விசாரணை நடத்தி இதில் அவர்களின் உறவினர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பதை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி