ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட்டின் புகைப்படத்தை பகிர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் வேடிக்கையான பதிவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக டெஸ்ட் பேட்ஸ்மேனான புஜாராவை ரூ.50 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது. அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை வென்று சாதனைப்படைத்தது. அந்தத் தொடரில் புஜாரா ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு சிப்ப சொப்பனமாக இருந்தார்.
ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஜோஷ் ஹேசல்வுட். அவர் சிஎஸ்கே அணியின் வீரரும் கூட. அப்போது நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஒன்றில் ஹேசல்வுட் எப்படி பந்துவீசினாலும் புஜாரா ஆட்டமிழக்கவில்லை. அப்போது மிகவும் சோர்வாக தலையில் கை வைத்தப்படி நின்று இருந்தார் ஹேசல்வுட். அந்தத் தொடரில் மட்டும் புஜாகா மொத்தம் 928 பந்துகளை சந்தித்தார்.
That moment when you realise you will have to bowl again to @cheteshwar1 in the nets @ChennaiIPL #IPLAuction #IPL2021 pic.twitter.com/hT2zzqn3Jq
— Wasim Jaffer (@WasimJaffer14) February 18, 2021Advertisement
ஹேசல்வுட் விரக்தியாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த வாசிம் ஜாபர் "நீங்கள் மீண்டும் வலைப்பயிற்சியில் புஜாராவுக்கு பந்துவீச வேண்டும் என்று உணர்ந்த தருணம்" என வேடிக்கையாக பதிவிட்டு இருக்கிறார்.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!