மறைந்த நடிகை சித்ரா சினிமாவில் முதன்முறையாக ஹீரோயினாக நடித்த ‘கால்ஸ்’ திரைப்படம் அடுத்தவாரம் வெளியாகவிருக்கிறது.
’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலம் கவனம் ஈர்த்தவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவர், குடும்பப் பிரச்னையால் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பான வழக்கும் நடைபெற்று வருகிறது. இறப்பதற்கு முன்பு சித்ரா சினிமாவில் முதன்முறையாக ஹீரோயினாக ’கால்ஸ்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அறிமுக இயக்குநர் சபரீஷ் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் டீசரும் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், ட்ரைலரும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இதன், ட்ரைலரை சித்ராவின் அப்பா காமராஜும், அம்மா விஜயாவும் வெளியிட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், ‘கால்ஸ்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது படக்குழு.
Loading More post
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்
மேற்கு வங்க தேர்தல் வன்முறையில் 5 பேர் சுட்டுக் கொலை - கலவரத்திற்கு காரணம் யார்?
தென்மாவட்டங்களின் சில இடங்களில் திடீரென இரவில் கொட்டித் தீர்த்த கனமழை!
இன்று முதல் 4 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா: தமிழகத்தில் நாள்தோறும் 2 லட்சம் பேர் இலக்கு!
பிருத்வி ஷா - தவான் அதிரடி! சென்னையை வீழத்தியது டெல்லி கேபிடல்ஸ்!