தனுஷின் ’கரணன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளதோடு யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்திலும் இருக்கிறது.
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் நடிகர் தனுஷை வைத்து ‘கர்ணன்’ படத்தை இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். படம் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் வெளியான இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களில் ஃபர்ஸ்ட் சிங்கிளை நேற்றிரவு வெளியிட்டிருக்கிறது படக்குழு.
‘கண்டா வரச்சொல்லுங்க.. கர்ணனை கையோட கூட்டி வாருங்க’ என்று கிடக்குழி மாரியம்மாளின் நாட்டுப்புறக் குரலோடு சேர்ந்து தனது இசையையும் குரலையும் சேர்த்து உயிரூட்டுகிறார் சந்தோஷ் நாராயணன். கும்மிருட்டில் பறையிசை அதிர பாடல் பதிவை நடத்தி பாராட்டுகளை குவித்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.
தீப்பொறியுடன் தனுஷ் புகைப்படத்தை சுவற்றில் வரைந்து கொண்டே பாடல் பதிவு செய்த காட்சி வித்தியாசமானதாகவும் கிரியேட்டிவிட்டியாகவும் இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள் ரசிகர்கள். முதல் சிங்கிள் பாடலிலேயே தீப்பொறி பறப்பதால் அசுர எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இந்தப் பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?