தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிப்ரவரி 25-ஆம் தேதிமுதல் காங்கிரஸில் விருப்பனு விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக காங்கிரஸ் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை சென்னை, சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளது.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக காங்கிரஸ் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை சென்னை, சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளது. pic.twitter.com/y6aQMLinIq
— KS_Alagiri (@KS_Alagiri) February 19, 2021Advertisement
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை மார்ச் 5 ஆம் தேதிக்குள் பொதுத்தொகுதிகளுக்கு ரூ. 5000, தனித்தொகுதிகளுக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்களும், மகளிருக்கு அனைத்துத் தொகுதிகளுக்கும் ரூ. 2500-ம் கட்சி நன்கொடையாக வரைவோலை மூலம் (Demand Draft) செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் முறையாகப் பூர்த்தி செய்து, இதர விபரங்களை விருப்பமனுவுடன் சேர்த்து நன்கொடை தொகையை TAMILNADU CONGRESS COMMITTEE என்ற பெயரில் வரைவோலையாக சென்னை, சத்தியமூர்த்தி பவனில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 ம் தேதிக்குள் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?