[X] Close >

“தோனியை காண கனவு கண்டேன்..இப்போது..” - சிஎஸ்கே ஏலம் எடுத்த தமிழக வீரர் ஹரி நிஷாந்த்

I-dreamed-of-seeing-Dhoni-now-I-am-going-to-play-with-him-Hari-Nishanth

தோனியை காண வேண்டும் என்பது என் கனவு, தற்போது அவருடன் விளையாட போகிறோம் என்பதை யோசித்து கூட பார்க்க முடியவில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள தமிழக வீரர் ஹரி நிஷாந்த் தெரிவித்துள்ளார்.


Advertisement

2021-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் அணிகளுக்கு வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான மினி ஏலம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் தமிழக வீரர் ஹரி நிஷாந்தை சிஎஸ்கே ஏலம் எடுத்துள்ளது. சென்னை அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டுள்ளது குறித்து பேசிய ஹரி நிஷாந்த், “ரொம்ப சந்தோஷமா இருக்கு, என்னால் தற்போது வரை இதை உணர முடியவில்லை. கோவையை சேர்ந்த ஜெகதீசன் ஏற்கனவே அணியில் இருப்பது நிச்சயம் உதவியாக இருக்கும், சிறு வயதில் இருந்து இருவரும் சேர்ந்து விளையாடி உள்ளோம்.

தோனியை காண வேண்டும் என்பது என் கனவு, தற்போது அவருடன் விளையாட போகிறோம் என்பதை யோசித்து கூட பார்க்க முடியவில்லை. வாய்ப்புகள் அனைத்துமே அனுபவம் தரும், அதனால் ஒவ்வொரு முறை வாய்ப்பு கிடைக்கும் போதும் சிறப்பாக செயல்பட வேண்டும். சென்னை அணியில் இருப்பேன் என எதிர்பார்க்கவில்லை, இப்போது கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close