சென்னை மதுரவாயலில் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் ஆத்திர நபர், தன் வீட்டில் அருகில் வசிக்கும் அருள்வாக்கு சொல்லும் சாமியார் அதற்கு காரணம் என கருதி அவரை கத்தியால் குத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (56). இவர் அதே பகுதியில் ஆதிபராசக்தி அங்காளபரமேஸ்வரி என்ற பெயரில் ஆலயம் வைத்து பொதுமக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வருகிறார். இந்நிலையில் ஆலயத்தின் அருகில் வசிக்கும் திருமலை (38), என்பவரது மனைவி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கணவருடன் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு சென்றுவிட்டார். தனது மனைவி கோபித்துக் கொண்டு சென்றதற்கு ராஜேந்திரன் தான் காரணம் என்று கூறி ஆத்திரமடைந்த திருமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியில் ராஜேந்திரனின் வயிற்றில் குத்தி உள்ளார்.
இதை சற்றும் எதிர்பாராத ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் அலறியபடியே மயங்கினார். இதையடுத்து அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து திருமலையை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கி மதுரவாயல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் கத்திக்குத்து பட்ட ராஜேந்திரன் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மனைவி கோபித்து சென்றதற்கு சாமியார்தான் காரணம் என எண்ணி சாமியாரை கத்தியால் குத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி