இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அஸ்திவாரமான சட்டேஸ்வர் புஜாராவை சென்னையில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2021 சீசனுக்கான ஏலத்தில் பிக் செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
சர்வதேச அளவிலான ஷார்ட்டார் பார்மெட் கிரிக்கெட்டில் புஜாரா விளையாடி கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் கடந்ததுள்ள நிலையில் டி20 கிரிக்கெட் விளையாட அவரை பிக் செய்துள்ளது சென்னை அணி என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா, பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிக்களுக்காக கடந்த 2008 முதல் 2014 வரை புஜாரா விளையாடியுள்ளார். அதன் மூலம் மொத்தம் 30 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 390 ரன்களை அவர் குவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் புஜாராவின் ஸ்ட்ரைக் ரேட் 99.74. சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணி மூலமாக ஐபிஎல் களத்திற்கு புஜாரா கம்பேக் கொடுத்துள்ளார்.
We welcome the legend, Che #Bujji with a super cute applause from the auction hall! #WhistlePodu #SuperAuction ?? pic.twitter.com/6RdJkKBy5O — Chennai Super Kings (@ChennaiIPL) February 18, 2021
புஜாராவை 50 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது சென்னை அணி. புஜாரா டெஸ்ட் கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்ட் என்ற நிலையில் அவரை சென்னை பிக் செய்து சர்பிரைஸ் கொடுத்துள்ளது. அவர் மட்டுமல்லாது மொயின் அலி மற்றும் கிருஷ்ணப்ப கவுதமையும் சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
டெஸ்ட் பேட்ஸ்மேனான புஜாராவை ஏன் சென்னை அணி எடுத்துள்ளது கேதர் ஜாதவ் இடத்தை நிரப்பவா என்று சிலரும் புஜாரா திறமையை சரியா பயன்படுத்தி மீண்டும் தன்னை ஒரு சிறந்த தலைவன் என நிருபித்து காட்டுவார் தோனி என்று சிலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Loading More post
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
ஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி