[X] Close >

சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால் உடன் நடிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்?!

AR-Rahman-turns-actor-through-Mohanlal-movie

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழில் சிவகார்த்திகேயனின் 'அயலான்', சிம்பு - கெளதம் மேனன் இணையும் படம், இதேபோல் பாலிவுட்டில் சில படங்கள், ஹாலிவுட்டில் ஒரு படம் என பிசியாக இருந்து வருகிறார். ஏற்கெனவே ஒரு படத்தை தயாரிக்கும் திட்டத்திலும் ரஹ்மான் இருந்து வருகிறார். இந்த நிலையில்தான் தற்போது முதல்முறையாக நடிகராக களமிறங்க இருக்கிறார் எனச் செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால், அது தமிழ், இந்தி சினிமாவில் கிடையாது. மலையாள சினிமாவில் நடிகராக களமிறங்க இருக்கிறார்.


Advertisement

இயக்குநர் பி உன்னிகிருஷ்ணன் என்பவர் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து வரும் படம் `ஆராட்டு'. இந்தப் படத்தில்தான் மோகன்லால் உடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து நடிக்க இருப்பதாக மலையாள சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தப் படத்தில், முழுநீள ரோல் இல்லாமல் சிறப்புத் தோற்றத்தில் மட்டும் ஏ.ஆர்.ரஹ்மான் நடிக்க இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

image


Advertisement

மோகன்லாலின் புதிய படம் 'ஆராட்டு' மாஸ் என்டர்டெய்னராக எடுக்கப்பட்டு வருகிறது. `நெய்யட்டிங்கரா கோபன்' என மோகன்லால் கேரக்டருக்கு பெயரிடப்பட்டு வெளியாகியுள்ள 'ஆராட்டு' பட போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது. இசையமைப்பாளராக ரஹ்மான் முதலில் தடம் பதித்த மலையாள படம் 'யோதா'. இதிலும் மோகன்லால்தான் கதாநாயகன். இது நடந்த பல ஆண்டுகளுக்கு பின் மோகன்லால் படத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான், மோகன்லால் உடன் நடிக்க இருப்பதாக செய்திகள் கசிய மலையாள சினிமா ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் உள்ளனர். ஆனால், தயாரிப்பாளர்கள் தரப்போ, படக்குழு தரப்போ, ஏ.ஆர்.ரஹ்மான் தரப்போ இந்தச் செய்தியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதேநேரம் மறுக்கவும் இல்லை. என்றாலும், ரசிகர்கள் இதைக் கேட்டு உற்சாகமாக உள்ளனர். இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சித்திக், சாய் குமார், நெடுமுடி வேணு, இந்திரன்ஸ் விஜயராகவன் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். மிக சமீபத்தில் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பில் மோகன்லால் போர்ஷன் முற்றிலும் முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close