உத்தர பிரதேசத்தில் தன்னுடைய மனைவிக்கு பாலியல்தொல்லை கொடுத்த தந்தையை அவரது மகனே ஆள்வைத்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவான்(45). மண்டேத் காலன் கிராமத்தில் ஆதர்ஷ் மண்டி காவல்நிலையதுக்கு உட்பட்ட பகுதியில் பவானுக்கு சொந்தமான வயல் இருக்கிறது. கரும்பு பயிரிட்டுள்ள தனது வயலுக்கு வருகிற பிராணிகளை விரட்டுவதற்காக அவர் இரவு 10 மணியளவில் தனது வீட்டிலிருந்து சென்றிருக்கிறார். ஆனால் வயலுக்குச் சென்ற அவர் மர்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்டதும், ரத்தவெள்ளத்தில் அவர் இறந்துகிடந்ததும் மறுநாள் காலை தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியதில், பவானின் மகன் அமித்தான் ஆள்வைத்து அவரது தந்தையை கொலைசெய்ததைக் கண்டறிந்தனர். விசாரித்ததில் தனது மனைவிக்கு பவான் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாகவும், பாலியல் உறவு வைத்துக்கொள்ளும்படி அவரை வற்புறுத்தியதாகவும் அமித் தெரிவித்தார். மேலும் இதனால் மனமுடைந்த அமித் ரூ. 2 லட்சம் கொடுத்து இரண்டு பேரிடம் தனது தந்தையை கொலைசெய்யுமாறு கூறியதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
சொந்த தந்தையையே கொலைசெய்த குற்றத்திற்காக அமித் மற்றும் மேலும் இரண்டுபேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி