[X] Close >

மேக்ஸ்வெல்லை போட்டி போட்டு ஏலம் கேட்ட சிஎஸ்கே, ஆர்சிபி - இறுதி விலை எவ்வளவு தெரியுமா?

RCB-bought-Glenn-Maxwell-for-more-than-14-crores-in-IPL-2021-Auction-at-Chennai

வரும் ஏப்ரல் - மே வாக்கில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த வீரர்கள் ஏலத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஆல் ரவுண்டரும், கிரிக்கெட் உலகின் பிக் ஷோவுமான மேக்ஸ்வெல்லை ஏலத்தில் எடுக்க அணிகள் போட்டி போட்டன. கடந்த சீசனில் அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். அவரை அந்த அணி ரிலீஸ் செய்ததை அடுத்து இந்த சீசனுக்கான ஏலத்தில் பங்கெடுத்தார்.


Advertisement

அவரது ஆரம்ப மற்றும் அடிப்படை தொகை 2 கோடி என தெரிகிறது. இந்நிலையில், அவரை ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மும்முரம் காட்டின. இறுதியில் 14.25 கோடி ரூபாய்க்கு மேக்ஸ்வெல்லை ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி. 

2012 முதல் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். 82 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1505 ரன்களை குவித்துள்ளார். டெல்லி, மும்பை மற்றும் பஞ்சாப் அணிக்காக இதற்கு முன்னர் அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார். தற்போது முதல்முறையாக அவரை பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்துள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 33.07 ஆகும்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close