நடிகர் அஜித்துடன் அவரது ரசிகர்கள் சிலர் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது
போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுகளைக் குவித்தது. இப்படத்தினை 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களை இயக்கிய வெற்றி இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி இருந்தார். 'நேர்கொண்ட பார்வை'-யின் வெற்றியால், இக்கூட்டணி மீண்டும் 'வலிமை' படத்தில் இணைந்தது.
ஹைதராபாத், ராஜஸ்தானில் படப்பிடிப்பை முடித்த படக்குழு சண்டைக் காட்சிக்காக தென் ஆப்பிரிக்கா சென்றது. இம்மாத இறுதிக்குள் படத்தை முடித்து அஜித்தின் 50-வது பிறந்தநாளான மே 1-ஆம் தேதி தியேட்டர்களில் கொண்டுவர கடுமையாக உழைத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அப்டேட் விரைவில் வரும் என தயாரிப்பாளர் தெரிவித்தார்.
படப்பிடிப்பை முடித்த அஜித், 10ஆயிரம் கிலோமீட்டர் பைக் பயணம் மேற்கொண்டார். அது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் பரவின. இந்நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் இன்று வைரலாகி வருகிறது. ஷார்ட் ஹேர்ஸ்டைல், கருப்பு நிற டி சர்ட், கருப்பு நிற தொப்பியுடன் மாஸாக இருக்கிறார் அஜித். அஜித்துடன் ரசிகர்கள் பலர் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!