[X] Close >

புதுச்சேரியில் அதிமுக ஆட்சி அமைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்

jayakumar-said-admk-again-set-governemnt-in-puducherry

புதுச்சேரியில் அதிமுக ஆட்சி அமைக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.


Advertisement

சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மூதாட்டியின் குற்றச்சாட்டை மாற்றி மொழிபெயர்த்து ராகுலிடம் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

image


Advertisement

அதற்கு பதிலளித்த ஜெயக்குமார் “உங்களைப்போன்று நானும் அதை பார்த்தேன். மொழிப்பெயர்ப்பு என்பது ஒரு கலை. அதை தெரிந்தவர்கள் செய்ய வேண்டும். எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது முதன்முதலில் வெற்றியை பதிவுசெய்த மாநிலம் புதுச்சேரி. அதனால் மீண்டும் புதுச்சேரியில் அதிமுக கொடி பறக்கும். அதிமுக அங்கு அரசு அமைக்கும். 7 பேர் விடுதலை என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. அதிமுகவில் சசிகலாவுக்கு உரிமையில்லை” எனத் தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close