ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
14-ஆவது ஐபிஎல் தொடர் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் அணிகள் வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் சென்னையில் முதன்முறையாக நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் 164 இந்திய வீரர்கள் உட்பட 292 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் ஹர்பஜன் சிங் மற்றும் கேதார் ஜாதவ் ஆகிய 2 இந்திய வீரர்களுக்கு அடிப்படை விலையாக 2 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், ஷகிப் அல் ஹசன், மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ், லியாம் பிளங்கெட், ஜேசன் ராய், மார்க் உட் ஆகிய 7 வெளிநாட்டு வீரர்களுக்கு 2 கோடி ரூபாய் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல்லில் முன் எப்போதும் இல்லாத வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் இம்முறை அணியை வலுப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.
இந்நிலையில் கேதார் ஜாதவ், முரளி விஜய், ஹர்பஜன் சிங், பியுஷ் சாவ்லா, மோனு சிங், ஷேன் வாட்சன் ஆகியோரை சிஎஸ்கே விடுவித்துள்ளது. ராஜஸ்தான் அணியிலிருந்த ராபின் உத்தப்பாவை சென்னை அணி சேர்த்துக்கொண்டுள்ளது. மேலும் மேக்ஸ்வெல் மற்றும் மொயீன் அலியை ஏலத்தில் எடுக்க சென்னை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வசம் 19 கோடியே 90 லட்சம் ரூபாய் மட்டுமே கையிருப்பு தொகை உள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்ற பெயரை மாற்றிக்கொண்டுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் அதிகபட்ச கையிருப்பு தொகையாக 53 கோடியே 20 லட்சம் ரூபாய் உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெறும் இந்த ஏலம் நாளை மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.
இந்த ஏலத்தில் தமிழகத்திலிருந்து ஷாருக் கான், சித்தார்த், ஹரி நிஷாந்த், சோனு யாதவ், அருண் கார்த்திக், பெரியசாமி, பாபா அபராஜித், எம்.முகமது ஆகிய வீரர்கள் போட்டியில் உள்ளனர். இவர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை விலையாக 20 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?