மேற்கு வங்கத்தில் ரயிலில் ஏறச்சென்ற அமைச்சர் ஜாகிர் ஹொசைன் மீது வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
மேற்கு வங்க மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சரான அவர், கொல்கத்தா செல்வதற்காக நேற்றிரவு முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள நிமிதா என்ற ரயில் நிலையத்தில் தனது ஆதரவாளர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அமைச்சரை நோக்கி வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் கடும் குழப்பம் ஏற்பட, அமைச்சருடன் வந்தவர்கள் அபயக் குரல் எழுப்பினர்.
வெடிகுண்டு வீச்சில் படுகாயமடைந்த அமைச்சர் ஜாகிர் ஹொசைன் ஜாங்கிபுர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் வந்த திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ உள்பட இரண்டு பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து நிமிதா ரயில் நிலையத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். தாக்குதல் குறித்து மேற்கு வங்க காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
வெடிகுண்டு வீச்சுக்கு திரிணாமூல் காங்கிரஸின் அரசியல் எதிரிகள்தான் காரணம் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான மலே கடாக் குற்றஞ்சாட்டி உள்ளார். இதனிடையே தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகக் கூறியுள்ளார்.
Loading More post
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
சட்டப்பேரவை தேர்தல்: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள்?
''குளிர்காலம் முடிவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்'': பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்
நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்!
அரசு போக்குவரத்து ஊழியர்கள் 3ஆவது நாளாக வேலை நிறுத்தம்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'