[X] Close >

ஈரோடு: தீ விபத்தில் 2 வீடுகள் எரிந்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

Erode-2-houses-burnt-down-in-a-fire-accident-costing-Rs-1-lakh-worth-of-goods-were-damaged

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள புன்செய் புளியம்பட்டி அருகே நடந்த தீ விபத்தில் 2 வீடுகள் எரிந்து நாசமாயின. வீட்டில் கட்டியிருந்த ஆட்டுக்குட்டிக்கு தீக்காயம் ஏற்பட்டது.


Advertisement

image


Advertisement


சத்தியமங்கலத்தை அடுத்துள்ள புன்செய் புளியம்பட்டி கோட்டப்பாளையம் ஆதிதிராவிட காலனியைச் சேர்ந்த சின்னபழனி மற்றும் ராமாயாள் ஆகியோர் வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறுவதை பார்த்த கிராம மக்கள் நம்பியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வாகனம் வருவதற்குள் தீ வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

அப்போது வீட்டின் முன்பு கட்டியிருந்த ஆட்டுக்குட்டி தீயில் சிக்கியது. அங்கிருந்தவர்கள் லேசான தீக்காயத்துடன் ஆட்டுக்குட்டியை மீட்டனர். ஆட்டுக்குட்டி காயத்துடன் உயிர்தப்பியது. இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இரு ஓட்டு வீடுகளில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.


Advertisement

image


சுமார் 2 மணிநேர போராட்டத்திற்குப் பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close