பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் (யுஜிசி) அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களையும் , காம்தேனு கெள விஜியன் பிரச்சர் நடத்தும் “பசு அறிவியல்” தேர்வை எழுத மாணவர்களை ஊக்குவிக்குமாறு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்தியா முழுவதும் ஆன்லைனில் நடைபெறும் இந்தத் தேர்வு பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெறுகிறது.
யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் கையெழுத்திட்ட இந்த சுற்றறிக்கையில், பல்கலைக்கழகங்களுக்கும் அதனுடன் இணைந்த கல்லூரிகளுக்கும் தகவல் தெரிவிக்கும்படி துணைவேந்தர்களை வலியுறுத்தியிருக்கிறது. "நான் உங்களிடம் இதை கோருவதற்காகவும், இந்த முயற்சிக்கு பரவலான விளம்பரம் கொடுக்கவும், இந்த தேர்வுக்கு தங்களை பதிவு செய்ய மாணவர்களை ஊக்குவிக்கவும் இதை எழுதுகிறேன். இது உங்கள் பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லவும் ” என தெரிவித்திருக்கிறார்
இந்தியாவில் பூர்வீக பசுவின் பொருளாதார, அறிவியல், சுற்றுச்சூழல், சுகாதாரம், வேளாண்மை மற்றும் ஆன்மிக ரீதியான தொடர்பு பற்றிய தகவல்களை பரப்புவதற்காக மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரிய காம்தேனு ஆயோக் இந்த தேர்வை நடத்தவுள்ளது.
அனைவருக்கும் நடத்தப்படும் இந்த ஆன்லைன் தேர்வினை முதன்மை, இடைநிலை மற்றும் மூத்த மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிப்பவர்களும் எழுதலாம். பொதுமக்கள் அனைவரும் எழுதலாம், தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
ராஷ்ட்ரிய காம்தேனு ஆயோக் தலைவர் வல்லபாய் கதிரியா கூறுகையில், ஆண்டுதோறும் இந்தத் தேர்வு நடைபெறும். இளம் மாணவர்கள் மற்றும் பிற குடிமக்கள் மத்தியில் பசு மாடுகளைப் பற்றி வெகுஜன விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே, பசு அறிவியல் தொடர்பான தேசிய தேர்வை நடத்த முடிவு செய்தோம் என;j தெரிவித்தார்.
இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் பஞ்ச்கயா என்ற தலைப்பில் உள்ளது. இது பசு மாடுகளிடமிருந்து பெறப்பட்ட ஐந்து காவியங்களின் கலவையாகும். பால், நெய் மற்றும் தயிர் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகளை விவரிப்பதைத் தவிர, பசு சாணம் மற்றும் மாட்டு சிறுநீருக்கும் இந்த தேர்வு முக்கியத்துவம் அளிக்கிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது
Loading More post
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
பெட்ரோல் டீசலுக்கு லோன் தாங்க.. வங்கியில் மனு கொடுத்த இளைஞர்கள்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'