[X] Close >

இலங்கை அணிக்கெதிரான தோல்வி: நடுவரை குற்றம்சாட்டும் ஜிம்பாப்வே கேப்டன்

Defeated-Sri-Lanka-Zimbabwe-captain-of-the-accused

இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததற்கு மூன்றாவது நடுவரின் கடினமான முடிவுகளும் காரணமாக அமைந்துவிட்டதாக ஜிம்பாப்வே அணியின் கேப்டன் க்ரீமர் தெரிவித்தார். 


Advertisement

கொழும்புவில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த 388 ரன்கள் இலக்கை, இலங்கை அணி 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது. இதன்மூலம் ஆசியக் கண்டத்தில் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற பெருமையையும் இலங்கை அணி பெற்றது. 
போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜிம்பாப்வே அணியின் கேப்டன் க்ரீமர், இலங்கை அணியின் டிக்வெல்லா ஸ்டம்பிங் செய்யப்பட்டபோது மூன்றாவது நடுவர் எடுத்த முடிவு சற்றே கடினமானது. அவரது கால் கிரீஸுக்கு வெளியில் இருந்தும் அவுட் கொடுக்காதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. டிக்வெல்லாவின் விக்கெட்டை எடுத்திருந்தால் போட்டியின் முடிவில் மாற்றம் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு என்று தெரிவித்தார். 
388 என்ற சவாலான இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 203 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், 6ஆவது விக்கெட்டுக்கு டிக்வெல்லா-குணரத்னே ஜோடி 121 ரன்கள் குவித்து வெற்றியை எளிதாக்கியது. 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த டிக்வெல்லா, இருமுறை அவுட் கண்டத்தில் இருந்து தப்பினார். இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றிருந்த நிலையில், அந்த அணிக்கெதிராக முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் ஜிம்பாப்வே அணி களம் கண்டது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close