[X] Close >

தேடப்படும் இன்னொரு டாப் ஹீரோ... ஷங்கர் - ராம் சரண் படத்தில் ட்விஸ்ட்!

Ram-Charan---shankar-movie-project-update

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், ராஜெமளலி இயக்கிவரும் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்படுகிறது. இதற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இயக்குனர் ஷங்கர் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் ராம் சரண் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகின.


Advertisement

ஷங்கர் - ராம் சரண் காம்போ தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவும் புதுமையாகவும் அமைந்திருக்கிறது. இதற்கிடையே புதிய ட்விஸ்ட்டாக இந்தப் படத்தில் மற்றொரு நடிகர் இணையலாம் என்று தெலுங்கு திரையுல வட்டாரங்கள் கூறுகின்றன. அதாவது, மல்டி ஸ்டார் படமாக இது அமையலாம் என்று கூறப்படுகிறது. முதலில் பவன் கல்யாணைத் தான் இந்தப் படத்துக்கு ஷங்கர் தேர்வு செய்திருந்ததாகவும், தற்போது இந்தப் படத்தில் மற்றொரு டாப் ஹீரோ நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் கூறியுள்ளன.

அதுவும் அந்த டாப் ஹீரோ தெலுங்கு சினிமாவைச் சேர்ந்தவராக இருக்க வாய்ப்பில்லை என்றும், வேறொரு மொழியைச் சேர்ந்த ஒரு ஹீரோ ராம் சரணுடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.


Advertisement

ஷங்கர் தற்போது தனது திரைக்கதைக்கு இறுதி வடிவத்தை அளித்து வருவதால், அந்த டாப் ஹீரோ தேர்வு இன்னும் நடக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

image

இந்தப் படத்தை ஆந்திராவின் புகழ்பெற்ற தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தில் ராஜு தயாரிக்க இருக்கிறார். இந்த நிறுவனத்தின் 50-வது படம் என்பதால் பெரிய பட்ஜெட்டை முதலீடாக போட திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.


Advertisement

இதற்கிடையே, படம் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு கூறும்போது, "இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குநரான ஷங்கருடன், இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ராம் சரண் இணைந்து பணியாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. தேசிய அளவில் இந்தியாவின் அத்தனை விதமான ரசிகர்களுக்குமான ஒரு பொழுதுபோக்குப் படத்தை நாங்கள் கொண்டுவர இருக்கிறோம்" என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close