அமெரிக்காவிலிருந்து ரூ.16 கோடி மதிப்புள்ள மருந்து வாங்க தேவையான பணத்தை குழந்தையின் பெற்றோர் க்ரவுட் ஃபண்டிங் மூலமாக திரட்டினர்.
மும்பையைச் சேர்ந்த பிரியங்கா, மிஹிர் தம்பதியின் 5 மாதக் குழந்தை தீரா காமத். இந்தக் குழந்தை மிகவும் அரிதான 'ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி' (டைப்1) எனும் நோயால் மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோயால், குழந்தையின் நரம்பு மண்டலம் முற்றிலும் பாதிக்கப்பட்டு தசைகள் செயல்படாமல் போயின. இந்தக் குழந்தைக்கு மும்பையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தைக்கு தேவைப்படும் மருந்தான ஜோல்ஜென்சிமா எனும் மருந்து அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும். இந்த மருந்தின் விலை ரூ.16 கோடி ஆகும். இந்தியாவில் இந்த மருந்து ஜிஎஸ்டி வரியாக 12 சதவீதம், இறக்குமதி வரி 23 சதவீதம் என மொத்தம் ரூ.6 கோடிவரை விதிக்கப்படும்.
குழந்தையின் மருத்துவச் செலவுக்காக பிரியங்கா, மிஹிர் தம்பதி இருவரும் க்ரவுட் ஃபண்டிங் மூலம் நிதியுதவி கேட்டதில் ஏராளமான நிதி சர்வதேச அளவில் குவிந்தது. இதனிடையே குழந்தையின் உயிரைக் காக்கும் பொருட்டு மருந்துக்கான இறக்குமதி வரி, ஜிஎஸ்டி வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் மருந்துகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தீரா காமத்தின் பெற்றோர் பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதையடுத்து, பிரதமர் மோடியின் உத்தரவின் பெயரில் குழந்தையின் உயிர்காக்கும் மருந்துக்கான இறக்குமதி வரி மற்றும் ஜிஎஸ்டி வரி என ரூ.6 கோடியை தள்ளுபடி செய்தும், மருந்துகளை விரைவாக விடுவிக்குமாறும் மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தங்களின் குழந்தையின் உயிர்காக்கும் சிகிச்சைக்காக நன்கொடை வழங்கியோருக்கு நன்றி தெரிவித்துள்ளனர் பிரியங்கா, மிஹிர் தம்பதியினர்.
''5 மாத குழந்தைக்காக உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ரூ.100 முதல் 5 லட்சம் வரை நன்கொடைகளை வழங்கினர். கனடா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட 10 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இணையத்தின் மூலம் நன்கொடை அளித்தனர். வசதியானவர்களால்கூட ரூ.12 கோடிக்கு செலவு செய்து மருத்துவம் செய்ய முடியாத சூழலில் பலரின் உதவியால் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த எங்கள் குழந்தைக்கு உதவி கிடைத்துள்ளது. இந்த நேரத்தில் எங்களது மகளின் உயிர்காக்கும் மருந்துக்காக நன்கொடை வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றனர்.
Loading More post
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
60 வயதை கடந்த 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்குத் தண்டனை... பஞ்சாப் அரசு முடிவு
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?