தமிழகத்தில் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால் பள்ளிகளில் 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு 6 நாட்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு, பாடங்கள் முடிக்கப்படுகின்றன. மேலும் செய்முறை வகுப்புகளும், வாரத்தில் இரண்டு நாக்ள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மே மாதம் 03-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி அன்று முடிவடையும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மே 3 மொழிப்பாடம்
மே 5 ஆங்கிலம்
மே 7 கணினி அறிவியல்
மே 11 இயற்பியல், பொருளாதாரம்
மே 17 கணிதம், விலங்கியல்
மே 19 உயிரியல், வரலாறு
மே 21 வேதியியல், கணக்குப்பதிவியல்
உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சம் மாணவ மாணவியர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். காலை 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை பொதுத்தேர்வு நடக்கும் எனவும் காலை 10 மணி முதல் 10. 10 மணி வரை மாணவர்கள் வினாத்தாளை படிக்க அனுமதிக்கப்படுவர் என்றும் காலை 10. 10 மணி முதல் 10.15 மணி வரை மாணவர்களின் விபரங்கள் பரிசோதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்!
சூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா!
19 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51..!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி