JUST IN

Advertisement

மாயாவதியின் முடிவை வரவேற்கிறோம்: தொல்.திருமாவளவன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவில் தலித்துகளுக்கு பாதுகாப்பில்லை என்பதால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ள பகுஜன் சமாஜ் கட்சித் ‌தலைவர் மாயாவதியின் முடிவு, தலித் பிரச்னையை கூடுதலாக விவாதிக்கச் செய்யும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
நெல்லையில் செய்தியாளரை சந்தித்த அவர், " ஒரு புறம் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தலித் ஒருவரை பாஜக அறிவித்துள்ள நிலையில் மறுபுறம், தலித் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முயன்ற மாயாவதிக்கு அனுமதி மறுக்கிறது. இதுதான் பாஜக-வின் உண்மை முகம். மாயாவதியின் ராஜினாமா முடிவை விசிக வரவேற்கிறது. ராஜினாமா அறிவிப்பின் மூலம் தலித் பிரச்னையை இந்திய அளவில் கூடுதலாக விவாதிக்க செய்ய முடியும்" என்றார்.


Advertisement

முன்னதாக, மாநிலங்களவை இன்று ‌கூடியதும், உத்தரப் பிரதேசத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து மாயாவதி கேள்வி எழுப்பி‌னார். அவர் பேசுவதற்கு 3 நிமிடங்‌கள் மட்டுமே‌ அனும‌தி அளிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த மாயாவதி ஆவேசமாகப் பேசினார். பின்னர் வெளிநடப்பு செய்த அவர், தலித் மற்றும் பழங்குடியினர் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகத்தான் நாடாளுமன்றத்துக்கு வருகிறேன். ஆனால் இங்கு அவர்களின் பிரச்னையை எ‌ன்னால்‌ பேச‌ மு‌டியவில்லை. அவ்வாறு இருக்கும்போது‌ எதற்காக நான் நாடாளுமன்றத்துக்கு வர வேண்டும். ‌‌எனவே, எனது பதவியை ராஜினாமா செய்‌ய முடிவு செய்துள்ளேன் எனக் கூறி தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement