கடலூர் மாவட்டம் பன்ருட்டி அருகே என்கவுண்டரில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரா என்பவர் தனது வீட்டின் அருகே அமர்ந்திருந்தபோது அவரை சுற்றிவளைத்த ஒரு கும்பல் அவரின் கழுத்தை அறுத்து தலையை தனியாக எடுத்துச்சென்றது. தகவலறிந்து வந்த போலீசார் கழுத்தில்லாத வீராவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீராவின் தலையை நேற்று இரவு முதலே தேடி வந்தனர்.
மேலும் தனிப்படை அமைத்து இந்த கொடூர கொலைக்கு காரணமானவர்களை போலீசார் மாவட்டம் முழுவதும் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் புதுப்பேட்டை மலட்டாறு பகுதியில் குற்றவாளிகள் 7 பேர் சுற்றி வளைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் கிருஷ்ணா என்பவர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அதனால் அவரை போலீசார் என்கவுண்டர் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதையடுத்து கிருஷ்ணாவின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. கிருஷ்ணாவிற்கும் வீராவிற்கும் ஏற்கெனவே முன்பகை இருந்ததாகவும் அதனால்தான் கொடூர கொலை அரங்கேறியுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி