[X] Close >

கடலூர்: 8 வயது சிறுமிக்கு 60 வயது முதியவரால் ஏற்பட்ட கொடூரம்!

Cuddalore-An-8-year-old-girl-was-brutally-by-a-60-year-old-man-Pokso-that-fell-on-the-old-man

மூன்றாம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.


Advertisement

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த எழுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (60). இவர் அதே பகுதியைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த நிலையில் சிறுமி, வலி தாங்காமல் தனது தாயிடம் நடந்ததைக் கூறி அழுத நிலையில் ராமநத்தம் காவல்துறையிடம் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

image


Advertisement


இதையடுத்து புகாரின் பேரில் சிறுமியை மருத்துவப் பரிசோதனைகள் செய்து குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராமநத்தம் காவல்துறையினர் மணிகண்டனை விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close