இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரும், தமிழகத்தை சேர்ந்தவருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அசத்தினார். அதன் மூலம் இந்திய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதோடு ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றுள்ளார்.
இந்நிலையில் 4 நாட்களுக்கு பிறகு இந்த டெஸ்ட் போட்டியின் கடைசி நாளன்று அஷ்வினின் மனைவி பிரீத்தி அஷ்வின் கேமராவின் லென்ஸ் கண்களுக்குள் பட்டுள்ளார்.
“அஷ்வின் இங்கிலாந்து அணிக்காக இந்த போட்டியில் திறம்பட ஆடினார். இருப்பினும் தன் மீதான கேமராவின் பார்வையை லாவகமாக தவிர்த்து வந்தார் அஷ்வினின் மனைவி பிரீத்தி அஷ்வின். இருந்தாலும் ஒரு வழியாக இறுதியில் அவரும் கேமராவின் பார்வைக்குள் சிக்கியுள்ளார்” என ட்வீட் செய்திருந்தார் கிரிக்கெட் விமர்சகர் பரத் சுந்தரேசன்.
Hahaha. I think they forgot my face ? https://t.co/XHQ8IOzneH — Prithi Ashwin (@prithinarayanan) February 16, 2021
“அவர்கள் என முகத்தை மறந்துவிட்டார்கள் என நினைக்கிறேன்” என அந்த ட்வீட்டை ரீ-ட்வீட் செய்துள்ளார் பிரீத்தி அஷ்வின். அதற்கு ரசிகர்கள் சிலரும் அவர் VIP ஸ்டேண்டில் இருந்திருந்தால் எப்போதும் கேமராவில் வந்திருப்பார். அவர் இருந்தது சாதாரண ஸ்டேண்டில் என கமெண்டும் செய்துள்ளனர்.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்