உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
பெங்களூருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொருளாதார சிறப்பு மண்டலத்தில் டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக உற்பத்தி கூடத்தை அமைக்க உள்ளதாக கர்நாடக மாநில முதல்வர் எடியூராப்பா தெரிவித்துள்ளார். இருப்பினும் இது தொடர்பாக டெஸ்லா நிறுவனம் எந்தவித தகவலையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
இந்தியாவின் 5 மாநிலங்களில் ஷோரூம் அமைக்கவும், ரிசர்ச் மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் உற்பத்தி;f கூடம் அமைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டெஸ்லா கடந்த மாதம் தெரிவித்திருந்தது. அதை வைத்து பார்த்தால் டெஸ்லா தனது உற்பத்தியை அடுத்து சில மாதங்களில் தொடங்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. அதற்கு வசதியாக இந்திய அரசின் மேக்-இன்-இந்தியா திட்டம் பெரிதும் உதவும் எனவும் நம்பப்படுகிறது.
CKD ரூட்டில் டெஸ்லா மாடல் 3 காரின் பாகங்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு, இங்கு அசெம்பிள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்கும் தனது நிறுவனம் இந்தியா வருவதை ட்வீட் மூலம் உறுதி செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி