வீட்டில் கழிப்பறை வசதி இல்லாத காங்கிரஸ் வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் பிப்ரவரி 21ஆம் தேதியன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. குஜராத் உள்ளாட்சி சட்ட விதிகளின்படி, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் வீட்டில் கழிப்பறை உள்ளது என்பதற்கான ஆவணத்தையும் சமர்பிக்க வேண்டும். வீட்டில் கழிப்பறை வசதி இல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.
இந்நிலையில் அகமதாபாத் மாவட்டம் சிங்கர்வா பஞ்சாயத்து தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் 47 வயதான கிரினா படேல் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அவரது வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என்று பாஜகவினர் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தனர். இதையடுத்து கிரினா படேல் வீட்டில் ஆய்வு செய்த அதிகாரிகள், அவரது வீட்டில் கழிப்பறை இல்லை என்பதை உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து கிரினா படேலின் வேட்புமனுவை மாநில தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது.
கிரினா படேலுக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், நரோடாவில் ஒரு பிளாட் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Loading More post
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
60 வயதை கடந்த 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்குத் தண்டனை... பஞ்சாப் அரசு முடிவு
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?