மேற்கு வங்காளத்தில் 5 ரூபாய்க்கு ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்.
மேற்கு வங்கம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க மம்தா பானர்ஜி முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார். அதேசமயம் பாஜக அவருக்கு கடும் சவாலாக விளங்கி வருகிறது.
இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் விதமாக 5 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார். ஐந்து ரூபாய்க்கு அரிசி சாதம், பருப்பு, காய்கறி மற்றும் முட்டைக்கறி கிடைக்கும் என்றும் ஒரு பிளேட் சாப்பாட்டிற்கு மாநில அரசு 15 ரூபாய் மானியமாக வழங்கும் எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சுய உதவிக்குழுக்களால் மதியம் 1 முதல் 3 மணி வரை இந்த உணவுக்கூடம் இயங்குவுள்ளதாகவும் படிப்படியாக மாநிலம் முழுவதும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.
Loading More post
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமை அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'