தனியார்மயமாக்கல்: 'முதற்கட்டமாக 4 வங்கிகளை தெரிவு செய்தது மத்திய அரசு'!

தனியார்மயமாக்கல்: 'முதற்கட்டமாக 4 வங்கிகளை தெரிவு செய்தது மத்திய அரசு'!
தனியார்மயமாக்கல்: 'முதற்கட்டமாக 4 வங்கிகளை தெரிவு செய்தது மத்திய அரசு'!

பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்காக, முதல் தெரிவுப் பட்டியலை மத்திய அரசு தயார் செய்துள்ளது என்றும், இந்த முதற்கட்ட பட்டியலில் நான்கு வங்கிகள் இடம்பெற்றுள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தில் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவால் முன்வைக்கப்பட்ட 1998 பட்ஜெட்டில், முக்கியமற்ற நிறுவனங்களில் மத்திய அரசின் பங்குகளை 50 சதவீதத்திற்கு குறைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி வி.எஸ்.என்.எல், பால்கோ, இந்துஸ்தான் துத்தநாகம், மாருதி சுசுகி மற்றும் சி.எம்.சி லிமிடெட் போன்ற நிறுவனங்கள் சில முக்கிய துறைகளில் விற்பனை பரிவர்த்தனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்தன.

அதன்பிறகு மோடி தலைமையிலான பாஜக அரசில்தான் தனியார்மயமாக்கல் தீவிரமயமாக்கப்பட்டு வருகிறது. அதிலும் சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அதிக துறைகளில் தனியார்மயமாக்கல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், நான்கு நடுத்தர அளவிலான அரசு வங்கிகளை தனியார்மயமாக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த நான்கு வங்கிகளை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த முதற்கட்ட இறுதிப் பட்டியலில் உள்ள நான்கு வங்கிகளில் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் வங்கி ஆகியவை இடம்பெற்றுள்ளன. பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு அதிகாரி இந்தத் தகவலை கூறியதாக ராய்ட்டர்ஸ் தனது செய்தியில் கூறியுள்ளது.

``இந்த நான்கு வங்கிகளில் இரண்டு 2021-2022 நிதியாண்டில் விற்பனைக்கு தயாராக இருக்கும். முதல் கட்டமாக இப்படி, சிறிய வங்கிகளை வைத்து தனியார்மயமாக்கலை அரசாங்கம் சோதித்து பார்க்கவுள்ளது. வரவிருக்கும் ஆண்டுகளில் நாட்டின் சில பெரிய வங்கிகளும் தனியார்மயமாக்கப்படலாம்.

எவ்வாறாயினும், இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பெரும்பான்மை பங்குகளை அரசாங்கம் தொடர்ந்து வைத்திருக்கும்" என்று அந்த அதிகாரி கூறியிருக்கிறார்.

உண்மையான தனியார்மயமாக்கல் செயல்முறை தொடங்க 5 முதல் 6 மாதங்கள் வரை ஆகலாம் என்று அரசு வட்டாரம் தெரிவிக்கிறது. எனினும் நிதி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

'நூறாயிரக்கணக்கான ஊழியர்களைக் கொண்ட அரசு நடத்தும் வங்கித் துறையில் தனியார்மயமாக்கல் திணிக்கப்படுவது அரசியல் ரீதியாக ஆபத்தானது. மேலும், இந்த நடவடிக்கை ஊழியர்களின் வேலை வாய்ப்புகளில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகம் இரண்டாம் நிலை வங்கிகளை கொண்டு தனியார்மயமாக்கலை தொடங்க விரும்புகிறது' என்று அரசின் நடவடிக்கைக்கு தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ள.

வங்கி தொழிற்சங்கங்களின் மதிப்பீடுகளின்படி, பாங்க் ஆஃப் இந்தியாவில் சுமார் 50,000 பணியாளர்களும், சென்ட்ரல் வங்கியில் 33,000 ஊழியர்களும், இந்திய ஓவர்சீஸ் வங்கியில் 26,000 பேரும், பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் சுமார் 13,000 ஊழியர்களும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com