மெரினா கடலில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவர்களில் ஒரு மாணவர் உயிரிழந்ததையடுத்து மற்றொரு மாணவன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மெரினா கடற்கரை எழிலகம் எதிரில் உள்ள கடலில் 2 பள்ளி மாணாவர்கள் குளித்துள்ளனர். அப்போது வந்த ராட்சத அலையில் 2 பேரும் கடலில் மூழ்கினர். தகவலறிந்த அண்ணாசதுக்கம் போலீசாரும், மெரினா தீயணைப்பு மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். உடனடியாக கடலில் குதித்த தீயணைப்பு மீட்பு படையினர் 10 பேர், 2 பள்ளி மாணவர்களையும் கரைக்கு கொண்டு வந்தனர். அதில் ஒரு மாணவன் இறந்து போன நிலையில், மற்றொரு மாணவன் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணையில் இறந்து போனவர் பெயர் தனுஷ் (15) என்பதும் காப்பற்றப்பட்ட மாணவன் பெயர் லோகேஷ் (15) என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் பழைய வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் இருவரும் தனியார் பள்ளியில் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது. அண்ணாசதுக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 11-ம்தேதி மெரினா கடலில் தடையை மீறி குளித்த 3 கல்லூரி மாணவர்கள் மூழ்கினர். அதில் ஒரு மாணவனின் உடல் மட்டுமே கரை ஒதுங்கியது. இன்னும் 2 மாணவர்களின் உடல் கரை ஒதுங்கவில்லை. ஆனால் அதற்குள் இன்று மீண்டும் ஒரு பள்ளி மாணவன் பலியான சம்பவம் நடந்துள்ளது வேதனைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
மெரினா கடல் ஆபத்தான கடல் என்றும் அங்கு குளிக்க அனுமதி இல்லை என்றும் பலமுறை காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் தடையை மீறி குளிப்பவர்கள் உயிர் இழக்கக்கூடிய சம்பவமும் நிகழ்ந்து வருகிறது. பீச் பக்கீஸ் என்று சொல்லக்கூடிய வாகனம் மூலமாக காவல்துறையினர் கடற்கரை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டு, தடையை மீறி குளிப்பவர்களை தடுத்து எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.
ஆனால் காவல்துறை இல்லாத நேரத்திலும், மதிய வேளை நேரங்களிலும் இது போன்ற சம்வங்கள் நடந்து விடுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து காவல்துறையினர் கூறும் போது, “ கடலில் மூழ்குபவர்களை மீட்பதற்காக தீயணைப்பு மீட்பு படையினர், எப்போதும் தயார் நிலையில் இருக்கின்றனர். ஆனால் மாணவர்கள், பொதுமக்களுக்கு சமூக பொறுப்பு வேண்டும். அறிவுறுத்தலை பின்பற்ற வேண்டும்.” என்றனர்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?