இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரும், 2007 டி20 மற்றும் 2011 உலகக் கோப்பை நாயகனுமான யுவராஜ் சிங் கடந்த 2020 ஜூன் வாக்கில் இந்திய கிரிக்கெட் வீரர் சாஹல் மீது சாதிய ரீதியாக விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் யுவராஜுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கொதித்து எழுந்தனர்.
அது தொடர்பாக அப்போது வழக்கும் காவல் நிலையத்தில் பதிவாகியிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் அது தொடர்பாக ஹரியானா மாநிலம் ஹிசார் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதியுமாறும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து தற்போது காவல் நிலைய அதிகாரிகள் யுவராஜ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து தான் யாரையேனும் புண்படுத்தி இருந்தால் அதற்கு வருந்துகிறேன் என யுவராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுநாள் வரையில் இது தொடர்பாக யுவராஜ் எதுவும் சொல்லாமல் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
pic.twitter.com/pnA2FMVDXD — Yuvraj Singh (@YUVSTRONG12) June 5, 2020
“சாதி, நிறம், மதம் அல்லது இனம் என்ற பாகுபாட்டையும் நான் நம்பவில்லை என்பதை இங்கு தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். மக்களின் நலனுக்காக நான் எனது வாழ்வை அர்ப்பணித்துள்ளேன். தொடர்ந்து அதில் செயல்படுவேன். ஒவ்வொரு மனிதரையும் நான் மதிக்கிறேன்.
நான் எனது நண்பர்களுடன் உரையாடியபோது நான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது.
இருப்பினும், ஒரு பொறுப்புள்ள இந்தியர் என்ற முறையில் நான் யாருடைய உணர்வுகளையும் எதேச்சையாக புண்படுத்தியிருந்தால், அதற்காக வருத்தத்தை தெரிவிக்க விரும்புகிறேன். இந்தியா மீதும், அதன் மக்கள் மீதும் நான் களங்கமற்ற அன்பை வைத்துள்ளேன்” என யுவராஜ் தனது ட்விட்டர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். ரோகித் சர்மாவும், யுவராஜ் சிங்கும் இன்ஸ்டாகிராமில் கடந்த ஜூன் மாதம் உரையாடினார்கள். அப்போது யுவராஜ் சிங், சாஹல் மற்றும் குல்தீப் யாதவ்வை குறிப்பிட்டு சாதிய ரீதியிலான வார்த்தையைப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!