சென்னை மாதவரத்தில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் தச்சூர் பகுதியை சேர்ந்தவர் எட்வர்ட் லாரன்ஸ் (48). அப்பகுதியில் தச்சு தொழில் செய்து வரும் இவர், மாதவரம் பால்பண்ணை அருகேயுள்ள எம்.எம்.டி.ஏ முதல் தெருவில் வாடகை வீட்டில் மனைவி சரோவர்ஷா (41), இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு கணவன்-மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் லாரன்ஸ் தனது மனைவியை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சரோவர்ஷா சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாதவரம் காவல்துறையினர் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவரை தேடி வருகின்றனர்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?