குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பொதுக்கூட்ட மேடையில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் பிப்ரவரி 21 மற்றும் 28-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரை வேலைகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி மாநிலம் முழுவதும் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், குஜராத்தின் வதோதராவில் உள்ள நிஜம்புரா பகுதியில் நேற்று விஜய் ரூபானி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென யாரும் எதிர்பாராத வகையில் விஜய் ரூபானி மயங்கி விழுந்தார். அருகிலுள்ள காவலர்கள் அவரை தாங்கி பிடித்தனர். இதையடுத்து மேடையிலேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் ரூபானியின் சளி மாதிரி ஞாயிற்றுக்கிழமை இரவு சேகரிக்கப்பட்டு ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்றுக்கான லேசான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, துணை முதல்வர் நிதின் படேல் கூறுகையில், தற்போது விஜய் ரூபானி உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என தெரிவித்தார்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி