[X] Close >

”பேச்சுலர் படத்தில் சர்ச்சைக்குரிய எந்த விஷயங்களும் இல்லை” - இயக்குநர் பேட்டி

There-is-no-controversy-in-the-film-bachelor-movie-director

‘பேச்சுலர்’ படத்தில் எந்தவிதமான சர்ச்சைக்குரிய விஷயங்களும் இல்லை என அந்தப்படத்தின் இயக்குநர் சதீஷ் செல்வகுமார் கூறியுள்ளார்.


Advertisement

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து நடிக்கும் ‘பேச்சுலர்’ திரைப்படத்தின் டீஸர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அவருக்கு ஜோடியாக நடிகை திவ்ய பாரதி நடித்துள்ளார். முனீஷ்காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். காதல் கதைக்களத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார். Axcess Film Factory G.டில்லிபாபு இந்தப்படத்தை தயாரித்துள்ளார். டீஸர் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று யூடியூப் ட்ரெண்டில் நம்பர் 2 இடத்தைப் பிடித்துள்ளது.

image


Advertisement

இது குறித்து இயக்குநர் சதீஷ் செல்வகுமார் கூறும்போது, “கோயம்புத்தூரில் இருந்து பெங்களூரு ஐடி நிறுவனத்திற்கு பணியாற்ற வரும் ஒரு இளைஞனின் வாழ்வில், ஒரு பெண் குறுக்கிடும்போது நடக்கும் சம்பவங்களே ‘பேச்சுலர்’.இந்தப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இளம்பிராயத்து இளைஞனாக, வளர்ந்த ஆண்மகனாக என இரு விதமான தோற்றங்களில் நடித்துள்ளார்.

image

தேனி ஈஸ்வர் படத்தில் ஒவ்வொரு ஃப்ரேமையும் அழகுடன் செதுக்கியுள்ளார். படத்தின் டீஸர் வெளியாகியிருக்கிறது. டீஸரை பார்க்கும் போது, இந்தப்படம் வயது வந்தோர்க்கான படமாக தோற்றம் தரலாம். ஆனால் இந்தப்படம் குடும்பத்தில் அனைவரும் இணைந்து பார்க்கும்படியான படமாக இருக்கும். படத்தில் எந்த விதமான சர்ச்சைக்குரிய விசயங்களும் இல்லை. பேச்சுலர் அனைவருக்கும் பிடிக்கும்படியான படமாக இருக்கும்.” என்றார்.


Advertisement

image


இது குறித்து தயாரிப்பாளர் G.டில்லிபாபு கூறும்போது, “ பேச்சுலர் வயது வந்தோருக்கான படமல்ல. குடும்பத்தினர் அனைவரும் இணைந்து பார்க்கும் படியான அழகான கமர்ஷியல் படம். “ஓ மை கடவுளே” போன்று இந்தப்படமும் ஒரு அழகான கருத்தை சொல்லும். ஆனால் அதிலிருந்து மாறுபட்டிருக்கும். படத்தை சென்சார் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. 2021 கோடை காலத்தில் படம் வெளியாகும்.” என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close