பிரதமர் மோடிக்கு எதிராக ட்விட்டரில் ஹேஸ்டேக் பதிவு செய்த நடிகை ஓவியாவுக்கு எதிராக பாஜகவினர் புகாரளித்துள்ளனர்
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று சென்னைக்கு வருகை தந்தார். காலை 10.30 மணிக்கு சென்னை வந்த அவர், நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு ரூ. 8,126 கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் மதியம் கேரளா சென்றார். இதற்கிடையே பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராகவும், ஆதரவாகவும் ட்விட்டரில் ஹேஸ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது. #GoBackModi, #TnWelcomesmodi ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தன.
நேற்று மோடி வருகை தந்த நிலையில் நேற்று முன் தினமே நடிகை ஓவியா #GoBackModiஎன்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டார். வேறு பதிவுகள் ஏதும் பதிவிடாமல் ஹேஷ்டேக்கை மட்டுமே அவர் பதிவிட்டிருந்தார். அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் பதிலளித்திருந்தனர். இந்நிலையில் நடிகை ஓவியாவுக்கு எதிராக பாஜகவினர் புகாரளித்துள்ளனர். தமிழக பாஜக ஐடி விங்க், சிபிசிஐடி சைபர் கிரைமில் புகாரளித்துள்ளனர். புகாரில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும், இறையாண்மைக்கு எதிராகவும் நடிகை ஓவியா செயல்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
Loading More post
கொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்
"வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்தியது இனப்படுகொலை!" - மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசம்
”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்!” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்
தொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்!
நாட்டில் புதிய உச்சம்: 1.50 லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு; ஒரேநாளில் 839 பேர் பலி