இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளின் அனைத்து வழித்தடங்களிலும் வரும் பிப்ரவரி 16 நள்ளிரவு முதல் வாகனங்களில் FASTag இருந்தால் மட்டுமே கடக்க முடியும். அப்படி வாகனங்களில் பாஸ்ட்டேக் இல்லை என்றால் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2008இன் படி இரண்டு மடங்கு கூடுதலாக சுங்கச் சாவடிகள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் மாநில அரசுகளிடம் தெரிவித்துள்ளது.
கடந்த 2016-இல் பாஸ்ட்டேக் கட்டண வசூல் முறை இந்தியாவில் அறிமுகமானது. எலெக்ட்ரானிக் முறையில் சுங்கச்சாவடி கட்டணத்தை செலுத்துவதுதான் பாஸ்ட்டேக். M மற்றும் N ரக வாகனங்களில் பாஸ்ட்டேக் பொருத்திக்கொள்ள கடந்த ஜனவரி 1, 2021 வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான கெடுத் தேதியை இனியும் அதிகரிக்கமுடியாது என தெரிவித்ததோடு பாஸ்ட்டேக் வசூல் முறை உடனடியாக அமலாகும் எனத் தெரிவித்துள்ளார் அந்த துறையின் அமைச்சர் நிதின் கட்கரி.
பாஸ்ட்டேக் வசூல் நடைமுறை இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள 720க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் அமலில் உள்ளது.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?