உலகின் பிரபலமான இளம் சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க்கின் "எதிர்காலத்திற்கான வெள்ளிக்கிழமை (Friday for future)" பரப்புரையின் நிறுவனர்களில் ஒருவரான திஷா ரவியை, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக குரல்கொடுக்க “டூல்கிட்” வழங்கியதற்காக டெல்லி காவல்துறை கைது செய்தது.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக குரல்கொடுத்த இளம் சுற்றுச்சூழல் காலநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் மற்றும் பலர் ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட "டூல்கிட்" தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த 22 வயது காலநிலை ஆர்வலர் திஷா ரவி டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திஷா ரவி "எதிர்காலத்திற்கான வெள்ளிக்கிழமை (Friday for future)" பரப்புரையின் நிறுவனர்களில் ஒருவர். அவர்தான் இந்த கருவித்தொகுப்பைத் திருத்தி அதை முன்னோக்கி அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பெங்களூரு நகரத்தின் சிறந்த மகளிர் கல்லூரிகளில் ஒன்றான மவுண்ட் கார்மல் கல்லூரியில் படிக்கும் இந்த மாணவி நேற்று மாலை கைது செய்யப்பட்டு டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.
பிப்ரவரி 4-ம் தேதி, ஸ்வீடன் காலநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் செய்த ட்வீட், குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது ஏற்பட்ட குழப்பம் மற்றும் வன்முறைக்குப் பின்னர் உலகளாவிய கவனத்தை ஈர்க்க உதவியது.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி