அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருபோதும் அமல்படுத்த மாட்டோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அசாம் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, சிவசாகர் என்ற இடத்தில் பேசிய அவர், பாரதிய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்-ம் அசாமை பிளவுபடுத்த முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி உள்ளார். இதனால் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் பாதிக்கப்பட மாட்டார்கள் - மாறாக, அசாமும் இந்தியாவின் பிற பகுதிகளும் பாதிக்கப்படும் என்றும் அவர் கவலை தெரிவித்தார். அசாம் மக்களை ஒருங்கிணைத்தது காங்கிரஸ்தான் என்று ராகுல் குறிப்பிட்டார்.
முன்பெல்லாம் வன்முறை காரணமாக பொதுக்கூட்டங்களிலிருந்து ஒருவர் வீடு திரும்ப முடியுமா என்கிற உறுதியான சூழல் இருந்ததில்லை என ராகுல் கூறினார். தானும் காங்கிரஸ் தொண்டர்களும் அசாம் ஒப்பந்த உடன்பாட்டை பாதுகாப்போம் என்றும், ஒரு அங்குலம் கூட அதிலிருந்து விலக மாட்டோம் எனவும் ராகுல் காந்தி உறுதிபடத் தெரிவித்தார். கொரோனா காலத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து அவரது நண்பர்கள் இருவரின் கடன்களை தள்ளுபடி செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி