சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் முதியவர்கள் இலவசமாக பயணம் செய்ய, நாளை முதல் டோக்கன்களைப் பெறலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக சென்னையில் முதியவர்களுக்கு, இலவச பேருந்துப் பயண டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை முதல், கட்டணமில்லா பயண டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், டோக்கன் பெறுவதற்காக, www.mtcbus.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தகுதிவாய்ந்த முதியவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, தங்களது இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள மையங்களில் டோக்கன்களைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள 21 பணிமனைகள் மற்றும்19 பேருந்து நிலையங்களில் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். முதியவர்களுக்கு ஒரு மாதத்திற்கு 10 வீதம், ஆறு மாதங்களுக்கான டோக்கன் வழங்கப்படவுள்ளது.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி