மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தாய், தந்தையை இழந்த சிறுவன், குடும்பத்தை காப்பாற்ற பனங்கிழங்கு விற்கும் நிலையில் இருப்பது காண்போரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருமுல்லைவாசல் சுனாமி நகரைச் சேர்ந்த இந்திராணிக்கு 60 வயதாகிறது. இவரது மருமகள் 7 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பரில் மகனும் உயிரிழந்தார். இத்தம்பதியின் மகன்களான 16 வயது முத்தரசனும், 14 வயது முத்துவேலும் பாட்டி இந்திராணியின் பாதுகாப்பில் உள்ளனர்.
தந்தை மறைவுக்குப் பின் குடும்ப பாரத்தை சுமக்க பனங்கிழங்கு விற்கும் முத்தரசன், பாட்டி உதவியுடன் சிறு கட்டுகளாக பனங்கிழங்குகளை கட்டி சீர்காழி, மயிலாடுதுறை மாதிரியான ஊர்களுக்கு எடுத்துச் சென்று விற்று வருகிறார். பனங்கிழங்கு விற்கும் வருமானம்தான் இக்குடும்பத்தின் பசியாற்றுகிறது.
நன்றாக படிக்கும் மாணவராக முத்தரசன், படிப்பை கைவிட மனமின்றி வரும் வாரத்தில் பள்ளியில் சேர உள்ளார். வறுமை என்னை பின்னுக்கு இழுத்தாலும் படிப்பு தன்னையும் குடும்பத்தையும் முன்னேற்றும் என்று கூறுகிறார் முத்தரசன்.
Loading More post
மேற்குவங்க 6-ஆம் கட்ட தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ