சிவகாசி பட்டாசு விபத்தில் பலர் உயிரிழந்ததற்கு, அளவுக்கு அதிகமாக பணியாளர்களை ஈடுபடுத்தியதே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒருவருக்கு குத்தகைக்கு விடப்பட்ட ஆலை, அடுத்தடுத்து 4 பேருக்கு உள்குத்தகைக்கு விடப்பட்டதும் அம்பலமாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலருக்கு 60 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வெடி விபத்து சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குத்தகைதாரர் பொன்னுப்பாண்டி என்பவரை கைது செய்த காவல் துறை, உரிமையாளர்களை தேடி வருகின்றனர். இந்த நிலையில் விபத்து தொடர்பாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. பாட்டாசு ஆலை விதிமுறையை மீறி குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. ஒருவருக்கு குத்தகைக்கு விடப்பட்ட ஆலை, அடுத்தடுத்து 4 பேருக்கு உள்குத்தகைக்கு விடப்பட்டதும் அம்பலமாகியுள்ளது.
இதுதவிர ஆலையில் அளவுக்கு அதிகமான பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டதும், உயிரிழப்பு அதிகரிப்பதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, உயிரிழந்த 19 பேர்களில் அடையாளம் காணப்பட்ட 16 நபர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும், 3 பேரின் உடல்கள் அடையாளம் காண உறவினர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!