[X] Close >

'இந்தியாவுக்கான அழிவுக்கால மனிதர்' ஆக மாறி வருகிறார் ராகுல் காந்தி! - நிர்மலா சீதாராமன்

Nirmala-Sitharaman-said-Rahul-Gandhi-was-becoming-a-doomsday-man-for-India

அரசியலமைப்புச் செயற்பாட்டாளர்களை தொடர்ந்து அவமதித்து, பல்வேறு விஷயங்களில் போலிக் கதைகளை உருவாக்குவதன் மூலம் 'இந்தியாவின் அழிவுக்கால மனிதர்' ஆக மாறி வருகிறார் ராகுல் காந்தி" என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்துள்ளார்.


Advertisement

மக்களவையில் பட்ஜெட் குறித்த பொது விவாதத்திற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி குறித்து கடுமையாக விமர்சித்தார். அதில், "முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போலிக் கதைகளை உருவாக்கி வருகிறார். ஆனால், அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில்களைக் கேட்க அவருக்கு பொறுமை இல்லை. காங்கிரஸ் கட்சியின் இந்த இரண்டு போக்குகளையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற அமைப்பு மீதான அவர்களின் நம்பிக்கை முற்றிலும் முடிந்தது என்பதையே இது தெளிவுபடுத்துகிறது. அவர் அநேகமாக இந்தியாவுக்கான அழிவுக்கால மனிதராக மாறி வருகிறார்.

வேளாண் சட்டங்கள் விவகாரங்களில் காங்கிரஸ் யு-டர்ன் எடுத்தது என்பது தொடர்பாக காங்கிரசிஸிடம் இருந்து தெரிந்துகொள்ள விரும்பினேன். ஆனால், எந்தப் பதிலும் வரவில்லை. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் அரசுகள் தங்கள் அறிக்கையில் வாக்குறுதியளிக்கப்பட்ட வேளாண் கடன்களை ஏன் தள்ளுபடி செய்யவில்லை. இது தொடர்பாக ராகுல் காந்தி ஏன் பேசவில்லை?


Advertisement

image

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் பஞ்சாபில் உழவர் பிரச்னை குறித்தும், அது தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ராகுல் காந்தி பேசவில்லை. வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுவின் (ஏபிஎம்சி) சீர்திருத்தத்தை ஆதரித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிக்கை குறித்தும் எதுவும் கூறவில்லை.

மேலும், விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களில் ராகுல் காந்தி எந்தவொரு பிரிவையும் குறிப்பிடவில்லை. அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான தனது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஒரு மசோதாவை கிழித்தெறிந்து அரசியலமைப்பு அதிகாரிகளை அவமானப்படுத்தியவர் ராகுல் காந்தி.


Advertisement

காங்கிரஸ் கட்சி "ஹம் டூ மற்றும் ஹமாரே டூ (நாம் இருவர், நமக்கு இருவர்) பற்றி மட்டுமே அக்கறை கொண்டுள்ளது. மருமகன் (ராபர்ட் வாதோரா) விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்திய நிலத்தை ராகுல் காந்தி திருப்பித் தருவார் என்றுதான் எதிர்பார்க்கிறேன். பிரேக் இந்தியா குழுவில் காங்கிரஸ் இணைந்து தொடர்ந்து இந்தியாவை இழிவுபடுத்துவதற்காக தவறானக் கதைகளை உருவாக்கி வருகிறது" என்று கடுமையாக சாடினார் நிர்மலா சீதாராமன்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close