ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 4 ஆவது சுற்றுக்கு செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், ரேங்கிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நோவக் ஜோகோவிச் 7-6 (7-1), 6-4, 3-6, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் 31 ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சை தோற்கடித்தார்.
இதனையடுத்து ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் 14-வது முறையாக 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார் ஜோகாவிச். அதேபோல தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் அர்ஜென்டினா வீரர் டிகோ ஸ்வார்ட்ஸ்மான் 3-6, 3-6, 3-6 என்ற நேர்செட்டில் ரஷ்யாவின் அஸ்லான் கராட்செவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
அதே சமயம் ஆஸ்திரியாவின் டொமினிக் திம், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், பல்கேரியாவின் டிமிட்ரோவ், கனடாவின் பெலிக்ஸ் ஆஜெர் மற்றும் மிலோஸ் ராவ்னிக், செர்பியாவின் துசென் லாஜோவிச் ஆகியோர் தங்களது சுற்றுகளில் வென்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தனர்.
Loading More post
நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்