சென்னையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் மிகவும் எதிர்பார்ப்புடன் 2ஆவது போட்டி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்ந்தெடுத்தார். இந்தப் போட்டியில் இந்திய அணியில் 3 மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி முதல் டெஸ்ட்டில் விளையாடிய பும்ரா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷபாஸ் நதீம் நீக்கப்பட்டு அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்தியா பேட்டிங்கை தொடர்ந்தது. தொடக்க வீரர்களாக சுப்மன் கில், ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இதில் சுப்மன் கில், ஒல்லி ஸ்டோன் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார்.
இந்தியா இப்போது 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்களுடன் விளையாடி வருகிறது. ரோகித் சர்மா 41 ரன்களுடனும் புஜாரா 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்
Loading More post
இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல்
இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 879 பேர் பலி
தஞ்சை: கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு? 2வது டோஸ் போடவந்தவர்களை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்!
"கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகலாம்" - உலக சுகாதார அமைப்பு கணிப்பு
’’பல புதிய கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளியுங்கள்” - பிரதமருக்கு சோனியா கடிதம்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!