ஐபிஎல் 2021 ஏலத்தில் 42 வயதான இடக்கை சுழற்பந்துவீச்சாளர் நயன் தோஷி இடம் பெற்றுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் வரும் 18-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் தங்களின் பெயரை பதிவு செய்யலாம் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த வாரம், 1,097 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருப்பதாக முதல்கட்டப் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்போது இறுதிப் பட்டியலாக 292 பேர் ஏலத்துக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இதில் மொத்தம் 292 வீரர்களில் இருந்து 22 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 61 வீரர்களை அணிகள் தேர்வு செய்யவேண்டும். இறுதிக் கட்டப் பட்டியலில் 164 இந்திய வீரர்களும் 125 வெளிநாட்டு வீரர்கள் மூன்று அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள். இதில் அதிக வயதுடைய வீரராக 42 வயதான நயன் தோஷி சேர்க்கப்பட்டுள்ளார். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலீப் தோஷியின் மகனாவார்.
இதுவரை 52 போட்டிகளில் விளையாடியுள்ள நயன் தோஷி 68 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடர் ஏலத்தில் இவருக்கு அடிப்படை தொகையாக ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி