காதலர் தினத்தன்று நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘ராதே ஷியாம்’ படத்திலிருந்து ஒரு முன்னோட்ட காட்சி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் பிரபாஸ், நடிகை பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் ‘ராதே ஷியாம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜனவரி 1 புத்தாண்டு அன்று வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து ப்ரீ - டீஸரும் வெளியிடப்பட்டது. 70 களின் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கப்படும் இந்தப்படத்தை இயக்குநர் ராதா கிருஷ்ண மூர்த்தி இயக்குகிறார்.
முக்கிய கதாப்பாத்திரங்களில் பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா மற்றும் பலரும் நடித்துள்ளனர். தமிழில் ‘பண்ணையாரும் பத்மினியும்’ ’ஒரு நாள் கூத்து’ உள்ளிட்டப் படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.
சமூக வலைதளங்களில் ‘ராதே ஷியாம்’ படம் குறித்த அப்டேட்டை கேட்டுக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு, படக்குழு சார்பில் இருந்து தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் வரும் பிப் 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று காலை 9.18 மணிக்கு ராதே ஷியாம் படத்திலிருந்து, ஒரு முன்னோட்ட காட்சி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Love is in the air! ?
Get ready to get a glimpse of #RadheShyam on 14th Feb at 9.18 AM! ☺️ #14FebWithRS
Starring #Prabhas & @hegdepooja pic.twitter.com/MhW4BnLEYD — Radha Krishna Kumar (@director_radhaa) February 12, 2021
முன்னதாக ‘ராதே ஷியாம்’ படத்தின் டீஸர் குறித்த அப்டேட்டை ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருந்த நிலையில் டீஸர் தயாராகி கொண்டிருப்பதாக அந்தப்படத்தின் இயக்குநர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
Teaser update is on the way guys!! Very very soon, till then just be patient!!! I promise your wait be worth a million smiles. #radheshyam — Radha Krishna Kumar (@director_radhaa) January 5, 2021
Loading More post
“எண்ணிக்கை குறைவு என்பதை விட நம்மை நடத்தும் விதம்” - கண்ணீர் விட்ட கே.எஸ்.அழகிரி!
பாமக தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத முரசு சின்னம் - கூட்டணியில் சர்ச்சை?
பீகாரில் பாஜகவுடன் கூட்டணி; மே.வ, அசாமில் எதிரணி - நிதீஷ் குமாரின் அதிரடி அரசியல் வியூகம்!
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி போட்டி
தீவிரம் காட்டும் ராகுல்... கேரளத்தில் கரையேறுமா காங்கிரஸ்?
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை