2020-ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா பட்டத்தை தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மானசா வாரணாசி வென்றுள்ளார்.
ஆண்டுதோறும் இந்தியா சார்பில் உலக அழகி போட்டியில் கலந்து கொள்பவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 'மிஸ் இந்தியா' அழகி போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் அந்த ஆண்டு நடைபெறும் உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்வார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மானசா வாரணாசி வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக அழகி போட்டியில் இவர் இந்தியா சார்பில் கலந்துகொள்ள உள்ளார்.
23 வயதான மானசா, ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். பொறியியல் படிப்பை முடித்த இவர், நிதி தகவல் பரிமாற்ற ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். மானசாவை அடுத்து ஹரியானாவைச் சேர்ந்த மனிகா சிஷோகந்த் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த மன்யா சிங் ஆகிய இருவரும் ரன்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Loading More post
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
60 வயதை கடந்த 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்குத் தண்டனை... பஞ்சாப் அரசு முடிவு
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?