இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக ராம் சரண் நடிக்கும் படத்தினை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், ராஜெமளலி இயக்கிவரும் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்,அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் ராம் சரண் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே ஷங்கர் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பானது சில பல பிரச்சனைகளால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் வேலையில் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை முடிந்தவுடன் ராம் சரண் உடனான திரைப்படத்தின் வேலையில் சேர உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் படமாக்கப்படும் என்றும் பிப்ரவரி 14 அன்று தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Loading More post
கொரோனா தடுப்பூசி இலவசம் என நான்கு மாநிலங்கள் அறிவிப்பு!
மேற்குவங்க 6-ஆம் கட்ட தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ